என்ன வச்சி ஏன் படம் பண்ணல.. எனது ரசிகர்களுக்கு பதிலை சொல்லுங்க என கேட்ட பாலகிருஷ்ணா.! பயத்துடன் சொன்ன ராஜமௌலி.

rajamouli-and-balarishna
rajamouli-and-balarishna

தெலுங்கு சினிமாவில் நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா அண்மையில் நடித்த திரைப்படம் கூட எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன  ரீதியாகவும் அடித்து நொறுக்கி வெற்றியை கண்டது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு தொலைகாட்சி ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் unstoppable with NBK என்ற நிகழ்ச்சியை பண்ணி வருகிறார்.

அண்மையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமௌலியும் அவரது சகோதரரான கீரவாணி உடன் பங்கு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளை ராஜமௌலியிடம் கேட்டார் பாலகிருஷ்ணா அதில் ஒன்றாக முதலில் அவர் கேட்ட வந்தது என் கூட நீ இதுவரை இணையவில்லை எனது ரசிகர்கள் இந்த கேள்விக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ராஜமௌலி பாலகிருஷ்ணா வை என்னால் கையாள முடியாது என பயத்துடன் கூறினார் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஒரே சமயத்தில் மதிக்கும் குணம் கொண்டவர் ஏதேனும் தவறு நடந்தால் அவர் அமைதியை இழந்து விடுவார் அல்லது ஏதாவது எரிச்சல் ஏற்பட்டால் அப்பொழுது நிலைமை மோசமாகிவிடும் என்னால் சமாளிக்க முடியாது.

அதனால்தான் பணியாற்றவில்லை என கூறினார். மேலும் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்து வந்த ராஜமவுலி ஒருகட்டத்தில் பாலகிருஷ்ணா  சந்தித்து மகதீரா  திரைப்படத்தின் கதையை சொல்லி உள்ளார்  சில காரணங்கள் அந்த படத்தில் அவர் நடிக்காமல் போனதற்குப் பிறகு அந்தத் திரைப்படம் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு போனது.

மேலும் நீங்கள் படம் எடுக்கும்போது மட்டும் ஏனோ 1, 2 ஆண்டுகள் ஆகிறது என பாலகிருஷ்ணா கேட்டார் அதற்கு பதிலளித்த அவர் நான் ஒவ்வொரு காட்சிகளையும் மிஸ் செய்து விடுவேன் என்ற பயம் எனக்குள் இருக்கிறது அந்த காரணத்தினால் நான் சரி படுத்தவே நீண்ட நாட்கள் ஆகிறது அதன் காரணமாகவே எனது படங்கள் சில நாட்கள் எடுத்து கொள்கின்றன என கூறினார்.