தெலுங்கு, மலையாளம் போன்ற சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா.இவர் தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து ஆடுபுலி, சக்கரவர்த்தி, கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் வில்லியாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் முதன்முதலில் 2003ஆம் ஆண்டு மலையாள சினிமாவின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் தலைவி திரைப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரிஷ்யம் 2 ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிசியாக இருந்து வருகிறார்.தற்பொழுது இவர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் பாலகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பூர்ணா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால் இத்திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் எனவே இவர் கண்டிப்பாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. பூர்ணாவிற்கும் முன்பு இவரின் கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சுருதிஹாசன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.