90 ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போன சீரியல்கள் என்றால் அது கனா காணும் காலங்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு நாம் சொல்லலாம். இந்த சீரியல் குடும்ப இல்லத்தரசி களையும் தாண்டி ரசிகர்களையும் அதிகம் கவர்ந்த சீரியலாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சீரியல் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது அப்போது விஜய் தொலைக்காட்சி பல சீரியல்கள் வெளிவந்தாலும் ஓடி கொண்டு இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி மவுசு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கதை கல்லூரியில் மாணவர்கள் என்ன செய்கிறாள் என்பதை அடப்பிடியே சொல்லும் கதையாக இருந்ததால் ரசிகர்கள் மிகவும் பிடித்த போன கதையாக அமைந்தது மேலும் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் ஒரு குறிப்பிடத்தக்கது.மேலும் கனா காணும் காலங்கள் தொடரை போலவே கல்லூரியின் கதை, கல்லூரி சாலை போன்ற 2 தொடர்களும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த தொடர்களில் நடித்த நடிகர், நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் நடித்து புகழ் பெற்றனர் அவ்வகையில் கனா காணும் காலங்கள் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி. வெள்ளித்திரையில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் அதன்பின் நகர்வலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பாலாஜி அதே ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தன் மனைவி ப்ரீத்தியுடன் இருந்து இரு மனதாக விவாகரத்து பெறுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். அதன் பின்பு அவர் சினிமாவிலும் சரி நிஜத்திலும் அவர் சரியாக காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.