வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் அந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க சில டாப் ஹீரோக்களையும் சின்னத்திரை பக்கம் இழுத்து சிறப்பாக நடத்தி வருகின்றன. அதில் முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியினை சீசன் சீசனாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து தொகுத்து வழங்கி வருகின்றன. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. தற்போது பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றன. ஆரம்பத்தில் இந்த சீசனில் சுவாரஸ்யம் சற்றுக் குறைவாகவே காணப்பட்டாலும்.
நிகழ்ச்சி சூடுபிடித்து கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன. மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்த சீசனில் கடைசி வரை இருந்து முதல் ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மக்களிடையே பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்தாலும்.
அவர் வெற்றி பெற்று திரும்பிய நிலையில் வெளியே அவருக்கு பல ரசிகர்கள் கூட்டமே இருந்தன. மேலும் இந்த நான்காவது சீசன் முடிவடைந்த பிறகு அந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் ஒவ்வொருவரின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
அதனடிப்படையில் அண்மையில் பாலாஜி முருகதாஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதற்கு ரசிகர்கள் பலரும் பாலாஜி முருகதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.