மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி சுமார் 70 நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்தது. எனவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார்கள் என்று மிகவும் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் வெற்றி பெற்றதை நேற்று கூறிய சிம்பு வெற்றி பெற்றதற்கான பரிசு கோப்பையை வழங்கினார். பிறகு பரிசாக 35 லட்சம் பெற்றுள்ளார்.
எனவே தற்பொழுது உள்ள அனைத்து போட்டியாளர்களும் பாலாஜி முருகதாஸுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். பாலாஜி முருகதாஸை தொடர்ந்து 2-வது இடத்தை மற்றும் மூன்றாவது நான்காவது இடம் என தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் தாமரை இருவரும் பிடித்துள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் பிக்பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்ததற்கான சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
பாலாஜி முருகதாஸுக்கு ஒரு நாளைக்கு 5000 சம்பளம் பேசப்பட்டுள்ளது அந்தவகையில் 70 நாட்களுக்கும் 17 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். வெற்றிபெற்ற பணமா 35 லட்சத்தையும் சேர்த்து 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக நிரூப் 50,000 சம்பளமாக பெற்றுள்ளார் இதனைத்தொடர்ந்து ரம்யா பாண்டியன் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று சரியான தகவல் வெளிவரவில்லை. நான்காவது இடத்தை பிடித்த தாமரைக்கு ரூபாய் 8 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.