விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். ஆரியுடன் இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இவர் பெரிய அளவில் ரீச் ஆனார்.
மேலும் அதுமட்டுமல்லாமல் இவர் எந்த ஒரு செயலையும் சுயமாகவே செய்வதால் மக்களுக்கு இவரை பிடித்துப்போக இவர் பிக்பாஸ் சீசன் நான்கில் இரண்டாவது பரிசை பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாராத நேரத்தில் பாலாஜி முருகதாசின் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார்.
எனவே இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளப் பக்கங்களில் பாலாஜியின் தந்தையின் இறப்பிற்க்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஷேர் செய்துள்ள புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இளம்பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு எவ்வளவு பிரச்சினை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் அதற்கு தீர்வு சரி வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும் எல்லாருடைய அன்புக்கும் நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலர் அப்பா இறந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு போஸ்டா என கேள்வி கேட்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.