பாலாஜி முருகதாஸின் தந்தை இறப்பிற்க்கு ஆரியின் இரங்கல் பதிவு!!

aari-balaji
aari-balaji

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வெற்றிகரமாக நிறைவடைந்தது .அனைவரும் எதிர்பார்த்தபடி வின்னராக ஆரியும் ரன்னராக பாலாஜியும் வெற்றி பெற்றார்கள்.

இந்நிலையில் அனிதா அப்பாவின் இறப்பை தொடர்ந்து பாலாஜி முருகதாஸின் தந்தை நேற்று இறந்தது நம் அனைவருக்கும் தெரியும்.

இதனை அறிந்த பாலாஜி முருகதாஸின் ரசிகர்கள் மற்றும் அவருடன் பிக்பாஸில் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் ஆரி அர்ஜுனனும் பாலாஜிக்கு தைரியம் சொல்லும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் பாலாஜி முருகதாஸின் தந்தை இறந்ததை அறிந்து நான் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் அவருடைய குடும்பத்தினருக்கு பலமும் தைரியமும் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

ஆரி மற்றும் பாலாஜி என்னதான் பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டு வந்தாலும் இவர்களின் புரிதல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்பொழுது நல்ல நண்பர்களாக உள்ளார்கள் என்று இந்த பதிவில் மூலம் ஆரி தெரிவித்துள்ளார்.