எனது பெற்றோர் குடிக்கு அடிமை என வேதனைப்பட்ட பிக் பாஸ் பாலாஜி பீர் ஊற்றி குளிக்கும் சர்ச்சை வீடியோ.!! சிக்கிட்டியே கைப்புள்ள என கலாய்க்கும் ரசிகர்கள்.

balaji murugadass controversy bathing video viral:விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நான்காவது சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சென்டிமென்ட் சண்டை என கலை கட்டுகிறது, இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் வருவதற்கு என்ன காரணம் ஒரு ஆழமான காரணத்தை கூறுங்கள் என உத்தரவிட்டார்.

அதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்துகண்டார்கள். அப்பொழுது பாலாஜி முருகதாஸ் தனக்கு ஏற்பட்ட துயரத்தை வெளிப்படையாக கண்ணீருடன் கூறினார், அப்பொழுது பாலாஜி முருகதாஸ் கூறுகையில் தன்னுடைய தந்தை, தாய் மதுவிற்கு அடிமையாகி விட்டார்கள் என்னை கவனித்து கொள்ளவே மாட்டார்கள் என கூறினார்.

மேலும் ஒரு குழந்தையை பெற்று முறையாக வளர்க்க முடியவில்லை என்றால் எதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென கேள்வியையும் எழுப்பினார். இவரின் சோகக் கதையைக் கேட்டு சக போட்டியாளர்கள் கண்ணீருடன் ஆறுதல் கூறினார்கள், இப்படி பாலாஜி முருகதாஸ் தமிழில் சோக கதையை கூறியதை கேட்டு ரசிகர்களும் அப்படியா என ஆர்மி தொடங்க ஆரம்பித்தார்கள்.

அதனைதொடர்ந்து பாலாஜி முருகதாஸ் சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலாஜி முருகதாஸ் கூறிய கருத்திற்கு நேரெதிராக அவர் மதுவில் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

balaji-murugadoss-1
balaji-murugadoss-1

அதுமட்டுமில்லாமல் பாலாஜி முருகதாஸின் அட்மின் ஒரு சில சர்ச்சை வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவரது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். வீடியோவை பார்த்து யோக்கியன் பாலாஜி முருகதாஸ் ஏழைத்தாயின் மகன் குடிகார பெற்றோரின் மகன் பாவம்ல. ஒரு மனுஷன் குளிக்கக்கூட பாத்ரூம் இல்லாமல் ஷாம்பு வாங்க காசு கூட இல்லாம பீர் ஊற்றி குளிக்கிறார் பாவம் என கலாய்த்து வருகிறார்கள்.