தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றுமே இயக்குனர் பாலச்சந்தரை தன்னுடைய குருவாக நினைப்பது வழக்கம் அந்த வகையில் ரஜினியின் வளர்ச்சியில் பாலச்சந்திரன் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும், அவர்கள், தில்லுமுல்லு போன்ற பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சரிதா ஆகியோர்கள் இணைந்து நடித்த தப்பு தாளங்கள் என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தையும் பாலச்சந்தர் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படம் தமிழ் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ரஜினிகாந்த் அவர்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் அவரது ஹோட்டல் அறைக்கு திரும்பினார் அதுமட்டுமில்லாமல் ஹோட்டலில் கொஞ்சம் மது அருந்திவிட்டு அவர் உறங்கி விட்டாராம்.
அன்று 10 மணி அளவில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ஒரு காட்சி விட்டுப் போய்விட்டது அதனை எடுக்க வேண்டும் என படபிடிப்புக்கு வாங்கல் என்று கூறினார்கள் மேலும் மருந்து அருந்தியதன் காரணமாக ரஜினிகாந்துக்கு படப்பிடிப்புக்கு செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்ததாம் ஆனால் சமாளித்துக் கொள்ளலாம் என சென்று விட்டாராம்.
அங்கு சென்றவுடன் பாலச்சந்தர் அருகில் செல்வதை தவிர்த்து விட்டால் எப்படியாவது தப்பித்து விடலாம் என நினைத்த ரஜினிகாந்த்தை பாலச்சந்தர் எளிதில் கண்டுபிடித்துவிட்டார். பின்னர் நாகேஷ் ஒரு மிகப்பெரிய நடிகன் அவனுக்கு முன்னாள் நீ எல்லாம் ஒரு எறும்பு கூட சமமாக மாட்டாய் அவர் மது பழக்கத்தால் தான் அவருடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார் இனிமேல் படப்பிடிப்புக்கு வரும்பொழுது நீ இப்படி வந்தால் செருப்பால அடிப்பேன் என்று கடுமையாக பேசி விட்டாராம்.
இந்த சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்த ரஜினிகாந்த் அவர்கள் கூறியுள்ளார் அதன் பிறகு எந்த ஒரு குளிர்பிரதேசத்தில் படபிடிப்பு இருந்தாலும் சரி நான் அந்த செயலை செய்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். என்று கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.