சினிமா உலகில் ஒரு சில இயக்குனர் மற்றும் நடிகர் இணையும் போது அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை நோக்கி ஓடும் அந்த வகையில் நடிகர் சூர்யா பல்வேறு நடிகர்களுடன் நடித்து வெற்றிப் படங்களை கொடுத்தாலும் சூர்யாவும் பாலாவும் இணையும் திரைப்படம் எப்பொழுதுமே பிளாக்பஸ்டர் படங்களாகவே அமைந்துள்ளன.
சொல்லப்போனால் சூர்யாவை மிகப் பெரிய அளவில் உயர்த்தி விட்ட பங்கு பாலாவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாலா எப்பொழுதுமே வித்தியாசமான படங்களை எடுக்கக் கூடியவர். அதில் சிறந்த நடிகர்களை நடிக்க வைத்து அவர்களையும் வளர்த்து விடுவது வழக்கம் அந்த வகையில் பாலா சூர்யா இதுவரை இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே வேற லெவல்.
பிதாமகன், நந்தா, அவன் இவன் போன்ற படங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவும் பாலாவும் இப்பொழுது இணைந்து படத்தில் பணியாற்றி வருகின்றனர் இது சூர்யாவுக்கு 41வது திரைப்படமாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கிறது.
இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு ஏற்கனவே சொல்லியது.
இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் மிக முக்கியமானது படப்பிடிப்பு தளத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு இன்று இந்த படம் தொடங்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது பிரச்சனை வர காரணமாக முதலில் இருந்தது போல..
இப்பொழுதும் இருக்கிறார் பாலா.. ஆனால் சூர்யாவின் வளர்ச்சி அதிகம் முதல் படத்தில் இருந்தது போல் இப்பொழுது இல்லாமல் வேற லெவலில் மாறிவிட்டார் அதுவே இவர்கள் இருவரும் தற்போது பிரச்சினையை உண்டாக்க காரணமாக அமைந்துள்ளது இதனால் தற்போது படத்தின் சூட்டிங் தொடங்குமா என்று தெரியவில்லை அந்த அளவிற்கு இந்த பிரச்சனையை பெரிதாக்கி விட்டது.