மறுபடியும் சாட்டையை சுழற்றிய பாலா ஆள விடுப்பா சாமி என கும்பிடு போட்டு ஓடிய அருண் விஜய்.? மீண்டும் அதே பஞ்சாயத்தா அதிர்ச்சியில் கோடம்பாக்கம்..?

bala-vanangan
bala-vanangan

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற லிஸ்டில் இருந்தவர் இயக்குனர் பாலா இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அது மட்டும் இல்லாமல் பாலாவின் திரைப்படத்தை பார்ப்பதற்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வந்த பல திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பாலாவின் குடும்பத்திலும் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டார் சட்டப்படி. இப்படி சினிமா வாழ்க்கை குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் தோல்வியை தழுவி வரும் பாலா தன்னுடைய முழு முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற திரைப்படத்தை தொடங்கினார் படத்தின் கதை மீனவர்கள் தொடர்பானது என்பதால் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த திரைப்படத்தை  தொடங்கியதிலிருந்து சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு நடைபெற்று வந்தது இப்படி தொடர்ந்து  கருத்து வேறுபாடு நடைபெற்று வந்ததால் உச்சத்தை அடைந்த சூர்யா முதற்கட்ட படப்பிடிப்பின் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் சூர்யா. அதன்பிறகு சூர்யா பாலா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து சரி செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது ஆனால் பாலா பிடிவாதம் பிடிக்க படத்தின் தயாரிப்பாளர் என்பதால் ஒரு கட்டத்தில் இறங்கி வந்தார் சூர்யா.

இருவருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு காலகட்டத்தில் சுமூகமாக முடிவுக்கு வந்தது பின்பு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப் போவதாக தகவல் வெளியானது ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. திடீரென இயக்குனர் பாலா வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கைவிடப்படுகிறது என பாலா மற்றும் சூர்யா இருவரும் அறிவித்தார்கள் இதனை தொடர்ந்து அதே கதையில் வேறு ஒரு நடிகரை  நடிக்க வைத்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் வணங்கன் திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்து நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தின் கதையை கன்னியாகுமரியில் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் வனங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது இதற்கு முன்பு சூர்யாவை வைத்து எடுக்கப்பட்ட அதே பகுதியில் அருண் விஜய் வைத்து 25 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார் பாலா. இந்த நிலையில் பாலாவின் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதைப் போல படப்பிடிப்பிற்கு பாலா உள்ளே வந்தாலே போதும் மற்ற ஆர்டிஸ்ட்கள் அனைவரும் பயத்துடனே தங்களது வேலையை பார்ப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் அருண் விஜய் இதற்கு முன் நடித்த படங்களில் இயக்குனருடன் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர் அதேபோல் ஒவ்வொரு காட்சியிலும் சில திருத்தங்களை தாமாக முன்வந்து அந்த சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் அருண் விஜய் தெரிவிப்பார் ஆனால் வணங்கான் படத்தில் பாலா என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே செய்துவிட்டு தனியாக சென்று அமர்ந்து விடுவார் என  தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் மேக்கப் மேன் உதவியாளர் என அருண் விஜய் இடம் நெருங்கினால் கூட அவர்களை வேண்டாம் பாலா சொல்லாமல் அருகில் நெருங்க வேண்டாம் எனவும் உத்தரவு போட்டு உள்ளாராம்.

இப்படி பாலா கடுமையாக நடந்து கொண்டாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்து முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு எஸ்கேப் ஆகி திரும்பி உள்ளார் விரைவில் வணங்கான் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.