நடிகர் சூர்யா எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது வழக்கம் அந்த வகையில் நடிகர் சூர்யா பாலாவுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமான திரைப்படங்கள் அதேசமயம் ஹிட் படமாக மாறி உள்ளது அந்த காரணத்தினால் இயக்குனர் பாலா மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் நடிகர் சூர்யா.
மிக விரைவிலேயே அவர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது ஒரு பக்கம் இருக்க.. நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்ஷன் திரைப்படமாக இருப்பதால் பொதுமக்கள் இந்த படத்தை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.
அதற்குள்ள இந்த திரைப்படம் 100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா அடுத்த திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். அந்தவகையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாலா உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு நாட்களிலேயே தொடங்க இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்பதால் பல்வேறு டாப் நட்சத்திரங்களை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் இயக்குனர் பாலா. அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த திரைப்படத்தில் நடிப்பார்கள் என ஏற்கனவே படகுழு.
கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில் அடுத்ததாக பல்வேறு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறது இந்த நிலையில் தெலுங்கில் ஹீரோயினாக நடித்துவரும் கீர்த்தி ஷெட்டி இத்திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.