தோல்வியை காணாத தமிழ் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்தது அதனால் வெற்றிமாறனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது கூட இயக்குனர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரி ஆகியவர்களை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு டாப் இயக்குனர்களுடன் கைகோர்த்து இயக்குனர் வெற்றிமாறன் படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். அதில் முதலாவதாக சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை எடுக்க உள்ளார் என முன்பே பேசப்பட்டது.
அதற்கு முன்பாக சூர்யா பாலா உடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் ஆரம்பத்தில் இருந்து பாலாவுக்கும், சூர்யாவுக்கும் பிரச்சனைகள் வர ஒரு கட்டத்தில் கோபமடைந்த சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார் அதே போலவே தான் தற்பொழுது வெற்றிமாறனுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை எழுந்து உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
அதாவது அண்மையில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டை காளி முழுக்க முழுக்க ஜல்லிகட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது வெற்றிமாறன் சூர்யா இணையும் வாடிவாசல் திரைப்படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தான் உருவாக இருக்கிறது. பேட்டை காளி படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் வாடிவாசல் படத்தின் கதையுடன் ஞாபகப்படுத்துவதாக கூறி சூர்யா இனி இந்த படத்தை தொடர்ந்தால் மக்கள் அதை ஆர்வமாக பார்க்க மாட்டார்கள் என யோசித்து இருக்கிறாராம்.
உண்மையில் பேட்டை காளி திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவே இல்லை இரண்டு கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு தனது பெயரை விட்டுக் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். பேட்டை காளிக்கும், வாடிவாசல் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என தெரிய வருகிறது ஆனால் சூர்யா நம்பாமல் வாடிவாசல் படத்தில் நடிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாராம்..