ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் நடிகையை திட்டிய பாலா – கோபப்பட்டு சீரியலுக்கு பக்கம் தாவிய நடிகை.!

bala
bala

இயக்குனர் பாலா தான் இயக்கும் படங்களின் கதையின்படி அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டுமோ அதை தத்துரூபமாக வெளிப்படுத்த வேண்டுமென அந்த நடிகர் நடிகைகளிடம் எதிர்பார்ப்பார். அது வரவில்லை என்றால் அவ்வளவுதான் அந்த நடிகர் நடிகைகளை திட்டி தீர்ப்பதை  வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி பாலா சினிமா உலகிற்கு என்ட்ரியான புதுமுக நடிகையை திட்டி தீர்த்ததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு சீரியல் பக்கம் சென்று உள்ளார். யாரது ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம். பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சேது.

இந்த திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து என்ட்ரி கொடுத்தவர் நடிகை அபிதா. அபிதாவுக்கு முதல் படமே வெற்றி படமாக சினிமாவில் இருந்தாலும் அதன் பின் பெருமளவு படங்களில் நடிக்காமல் சின்ன திரையில் வாழ்க்கையை கழித்தார். ஏன் அவர் சின்னத்திரை பக்கம் வந்தார் என்பது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.

அதாவது சேது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தில் ஒரு காட்சியில் எனக்கு நடனம் ஆடும்படி இருந்தது ஆனால் எனக்கு அப்பொழுது சுத்தமாக நடனம் ஆடவே தெரியாது இதனால் கோபம் அடைந்த இயக்குனர் பாலா எல்லோர் முன்னிலையிலும் என்னை திட்டி தீர்த்தார். எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருந்தது மேலும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி விட்டேன் ஆனால் பிறகு என் அம்மா என்னை சமாதானப்படுத்தினார்.

abitha
abitha

மறுநாள் பாலாவிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு பின் படத்தில் நடிக்க தொடங்கினேன். படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது அப்பொழுது நான் நடிக்க மாட்டேன் என கூறி இருந்தேன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு சில படங்களில் நடித்தேன் என கூறினார். மேலும் பாலா சேது படத்தின் ரிலீஸ் அப்போது பிரஸ் மீட்டிற்கு கூட என்னை கூப்பிடவில்லை என கூறினார் அபிதா. ஒரு கட்டத்தில் வெள்ளி திரையை விட சின்னத்திரை எனக்கு பெஸ்டாக தோன்றியது அதனால் நடித்தேன் என கூறினார்.

abitha
abitha