தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட பாலா..!

bala-surya-2

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சூர்யா எவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் வெற்றி சூடி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நடிகர் சூர்யா சமீபத்தில் சுதா பங்காரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் என்ற திரைப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த ஜெய்பீம் திரைப்படம் ஒரு தரப்பு மக்களை கவர்ந்தாலும் மற்றொரு தரப்பு மக்களிடம் பல்வேறு விமர்சனங்கள் எழக்கூடியது இவ்வாறு நடந்த அனைத்து  எதிர்ப்புகளையும் ஈடு கட்டிய நடிகர் சூர்யா அவர்கள் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும் கடைசியாக சூர்யா இடம்பெற்ற காட்சிக்கு  பிறகு மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மறைந்து விட்டது என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மிக பிரபலமான இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிகர் சூர்யா தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சமீபத்தில் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பாலாவின் பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கோலாலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு பிரபலங்களும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன் நிலையில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஒரு புதிய அப்டேட்டை வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

bala-surya-2
bala-surya-2