ரஜினி, கமலை வைத்து படம் பண்ண மறுக்கும் பாலா – உண்மையான காரணம் இதுதான்.? ஷாக்கில் ரசிகர்கள்.

bala
bala

சிறந்த படைப்பாளியாக பார்க்கப்படுவர் பாலு மகேந்திரா இவருக்கு கீழ் ஏகப்பட்ட உதவி இயக்குனர்கள் பணிபுரிந்து உள்ளனர். அந்த வகையில் பாலாவும் இவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி பின் தனது திறமையை வளர்த்துக் கொண்டு இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பாலா முதலில் விக்ரம் மற்றும் அபிதா ஆகியோர்களை வைத்து “சேது” என்ற படத்தை எடுத்தார்.

முதல் படமே சூப்பர் ஹிட் படமாக மாறியதால் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டினர். ஏன் ரஜினி கூட படத்தை பாராட்டி தள்ளினார். அதனைத் தொடர்ந்து பல சிறப்பான படங்களை இயக்கி தன்னை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார் ஆனால் பாலா ஒரு நடிகருக்காக கதையை உருவாக்குபவர் கிடையாது கதை எந்த நடிகரை தேர்வு செய்து இருக்கிறதோ அவரை வைத்து தான் படத்தை உருவாக்குவார்.

மேலும் தனது படத்தின் கதையை படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கே முழுவதுமாக சொல்ல மாட்டார் அந்த கேரக்டரை மட்டும் தெரிவித்து நடிக்க சொல்வாராம். மேலும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் வேறு எதுவும் செய்யக்கூடாது என சொல்வாராம். இயக்குனர் பாலா இதுவரை முன்னணி நடிகர்களை வைத்து பெரிய அளவில் படங்களை இயக்கியது கிடையாது.

குறிப்பாக ரஜினி, கமல் போன்றவர்களை வைத்து படங்களை இயக்கியது கிடையாது ஆனாலும் இவரது படம் பேசுவதற்கு காரணம் அவரது கதைகள் தான் அப்படித்தான் நான் கடவுள் படத்தில் ஆர்யா மற்றும் பூஜா மொட்ட ராஜேந்திரன் புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து சூப்பராக படத்தை எடுத்து இருப்பார் படம் நன்றாக ஓடியது இந்த படத்தை பார்த்த ரஜினி. பாலா, ஆர்யா, பூஜா போன்றவர்களை கூப்பிட்டு பாராட்டினார்.

இப்படி பாலாவின் ஒவ்வொரு படத்தையும் பார்த்து ரசிப்பதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார் ஒரு கட்டத்தில் பாலா உடன் படம் பண்ண ரஜினி ஆசைப்பட்டதும் உண்டு ஆனால் ரஜினிகாந்துக்கு ஏற்றார் போல படம் எடுக்க முடியாது நம்முடைய கதைக்கு ரஜினிகாந்த் செட்டாக மாட்டார் என வெளிப்படையாக கூறியுள்ளார் மேலும் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்க வேண்டும் என்கின்ற சிந்தனையும் பாலாவுக்கு வந்ததும் இல்லை ரஜினி தான் இல்லை.. கமலை இப்படி தான்.. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் ஹிந்தியில் வெளியான முன்னா பாய்ஸ் எம்பிபிஎஸ் என்ற பெயரில் வெளிவந்தது அந்த படத்தின் ரீமேக் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ்.

இதில் கமல் நடிக்கிறார் நீங்க.. ரீமேக் பண்ணுங்க என பாலாவிடம் கேட்டுள்ளனர் அதற்கு அவரோ இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது எனக்கென்று ஒரு படைப்பு இருக்கிறது அதுப்படி தான் நான் போவேன் என கூற… பின் வசூல்ராஜா படத்தை சரண் இயக்கினார். இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமலை வைத்து படம் பண்ண மறுத்தவர் பாலா.