சமீபகாலமாக திரையுலக வாழ்க்கையில் பிடித்த பிரபலங்கள் விவாகரத்து செய்து கொண்டு வருவது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. அதிலும் முன்னணி நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்வது தான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. பலருக்கு உதாரணமாக இருக்கும் நடிகர்கள் இப்படி நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்தார்கள் அதனைத் தொடர்ந்து பாலா மற்றும் அவரது மனைவி முத்து மலர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் சமந்தா மற்றும் அவருடைய கணவர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இப்படி அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது தமிழ்சினிமாவில். அந்த வகையில் பாலா அவரது மனைவி முத்து மலர் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தது சில வருடங்களாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்புதான் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த தகவல் சினிமா உலகையே உலுக்கியது தற்பொழுது முத்து மலர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார் அதேபோல் பாலா தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை மறப்பதற்காக படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலாவின் முன்னாள் மனைவி முத்து மலரோ தன்னுடைய முன்னாள் காதலனை நம்பி சென்று வாழ்க்கையை வீணாக்கி கொண்டார்.
முன்னாள் காதலனோ என் வாழ்க்கையில் பல பெண்களைப் பார்த்திருக்கிறேன் பல பெண்கள் வந்து போயிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை இன்று உன்னால் எனக்கு பெரிய பிரச்சனை தான் இதையெல்லாம் நான் சந்திக்க வேண்டிய தலையெழுத்து இனிமேல் நீ என்னை பார்க்க வரவேண்டாம் என்னிடம் பேச வேண்டாம் எனக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது நான் கூப்பிடுகிறேன் என மூஞ்சில் மேல் அடித்ததுபோல் முத்து மலரிடம் முன்னாள் காதலன் கூறியுள்ளாராம்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத முத்து மலர் மிகவும் சோகத்துடன் சென்றுள்ளார் அதன் பிறகு பத்திரிகையாளர்கள் பலரும் முத்து மலரிடம் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பது உண்மைதானா என கேட்டுள்ளார் அதற்கு இல்லை என பதில் அளித்துள்ளார் இதனையே பாலாவிடம் கேட்டுள்ளார்கள் பாலாவும் எனக்கு இனிமே இரண்டாவது திருமணம் தேவை இல்லை இனிமேல் என்னுடைய மகள் மட்டும் போதும் என கூறி முடித்து விட்டார்.
ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி வருகிறது சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாலாவும் முத்து மலரும் சந்தித்து கொண்டார்கள் அப்பொழுது பாலா தன்னுடைய மகளை மட்டும் பார்த்து கொஞ்சி விளையாடி விட்டு முத்து மலரை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார் இதனால் மனம் உடைந்த முத்து மலர் தங்களுடைய உறவினர்களிடம் பாலா அவர்கள் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார் நானும் அவரை நன்றாக பார்த்துக் கொண்டேன் நல்ல கணவன் மனைவியாக இருந்தோம் யார் கண் பட்டதோ தெரியவில்லை எங்கள் வாழ்க்கை இப்படி மாறிவிட்டது என அழுது புலம்புகிறார்.