தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களில் தனித்துவமான நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஏனெனில் தனக்கு ஒரு திரைப்படம் பிடித்து விட்டால் போதும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் இயக்குனர் என அனைவரையும் போனில் அழைத்து அவர்களை பாராட்டுவதில் வல்லவர். அந்த வகையில் சமீபத்தில் கூட விக்ரம் திரைப்படத்தை பார்த்த ரஜினி கமல் லோகேஷ் என பலரையும் ஃபோனில் அழைத்து பாராட்டி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு முன்பாக இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் என்ற திரைப்படத்தை பார்த்த ரஜினி பாலாவை பாராட்டியுள்ளார் அது மட்டும் இல்லாமல் நம்ம ஒரு படம் பண்ணலாமா என ரஜினி பாலாவிடம் வாண்டடாக கேட்டுள்ளார் ஆனால் பாலா தற்பொழுது வரை ரஜினியை இழுக்கப்போட்டு கொண்டு இருக்கிறார்.
பொதுவாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா விக்ரம் போன்ற நடிகர்களுக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்ததே பாலா தான். அந்த வகையில் ஒருவரிடம் இருந்து எப்படி நடிப்பை பெற வேண்டும் என்ற வித்தையை மிக சிறப்பாக கற்றுக் கொண்டவர். அந்த வகையில் இவர் நடிக்க தெரியாதவர்களை கூட நடிக்க வைப்பதில் வல்லவர்.
அதுமட்டுமில்லாமல் பாலா தனது திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகனை ஒருபோதும் அழகாக காட்ட மாட்டார் அதேசமயம் நடிகர் மற்றும் நடிகைகளை மிகவும் கேவலமாக பேசுவதும் காட்சிகள் மிக கடுமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தத்ரூபமாக யோசிப்பதும் அவற்றை செயல்படுத்துவதும் இவருக்கு புதிதல்ல.
அந்த வகையில் இதற்கெல்லாம் சூப்பர் ஸ்டார் வளைந்து கொடுக்கவும் முடியாது நாம் அவரிடமும் எதிர்பாக்கவும் முடியாது என்ற காரணத்தினால் தான் பாலா இன்று வரை ரஜினி ஏமாற்றி வருவது மட்டுமில்லாமல் கோபத்தில் ஏதேனும் வார்த்தையை விட்டால் ரசிகர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள் என்பதும் ஒரு காரணம்.