உனக்கு இருக்கு ஆப்பு.? சூர்யாவை பழிவாங்க சரியான நேரத்திற்கு காத்திருக்கும் பாலா.. உண்மையை உளறிய பிரபலம்

bala
bala

சிறந்த படைப்பாளி என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாலா இவர் பல நடிகர்களை வளர்த்துவிட்டு உள்ளார். அவர்கள் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர் அந்த வகையில் விக்ரம் சூர்யா என தொடங்கி பல நடிகர்கள் பாலாவின் மூலம் வளர்ந்தவர்கள் தான்.. இயக்குனர் பாலா உடன் சூர்யா நந்தா, பிதாமகன், அவன் இவன் போன்ற படங்களில் நடித்தார்.

நான்காவது முறையாக பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்ற திரைப்படத்தில் சூர்யா நடித்தார். படத்தின் ஷூட்டிங்கில் பல மணி நேரம் வெயிலில் சூர்யாவை நிக்க வைத்துள்ளார் பாலா இதனால் கடுப்பானதால் ஒரு கட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்து விட்டார் மேலும் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவியதால் ஒரு வழியாக சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தையும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேற்றினார் இதனால் வணங்கான் படத்திற்கும் சூர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போனது. உடனே சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மறுபக்கம் பாலா  அருண் விஜயை ஹீரோவாக போட்டு வணங்கான் படத்தை எடுத்து வருகிறார்.

படத்தின் முதல் கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் வெற்றிகரமாக எடுத்து முடித்தார் அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்தகட்ட சூட்டிங் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறதாம்.. இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா பிரபலம் அந்தணன்  பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அவர் சொன்னது.. பாலாவிற்கு சூர்யா மீது கோபம் இருந்தாலும் அதை காட்டுவதற்கான நேரம் இது இல்லை..

இந்த படத்தை சிறப்பாக எடுத்து அதை சூர்யாவிற்கு காண்பித்து இந்த படத்தில் நாம் நடிக்காமல் போய்விட்டோமோ என்ற எண்ணத்தை வர வைக்க வேண்டும் இதுதான் சூர்யாவுக்கு சரியான தண்டனையாக இருக்கும் என்று பாலா நினைப்பதால் பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் கதையிலும் மாற்றமில்லை இடத்திலும் மாற்றமில்லை எனவே சூர்யா நடித்த காட்சியை மட்டுமே தூக்கி விட்டு அருண் விஜயை நடிக்க வைத்துள்ளார்.

சினிமாவில் பாலாவை நம்பி பணம் போட்ட எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை மேலும் பலா நிச்சயம் வெற்றி படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லாததால் தனது பெயரில் இருக்கும் கலங்கத்தை துடைக்க தான் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை எடுக்க திட்டமிட்டார். இந்த படம் பாலாவுக்கு வாழ்வா.. சாவா.. பிரச்சனை தான் இதில் வெற்றி பெற பாலா பெரும் முயற்சி எடுத்து வருகிறார் என்றார்.