நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வந்த வாடிவாசல் திரைப்படம் மேலும் தள்ளிப் போக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இது பற்றிய தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா சூராரைப் போற்று திரைப்படத்திற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது அதோடு மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர்களின் கூட்டணியில் உருவாகி இருந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்த படத்தில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்த இவர் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தினை அடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்த வருகிறார்.
இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் உருவான வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விளக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது அதாவது வாடிவாசல் திரைப்படம் துவங்க தாமதமாகும் என தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தின் பிடிப்பு கடந்த வருடமே துவங்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணத்தினால் படப்பிடிப்பு தள்ளிப்போனது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இன்னும் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது தற்பொழுது நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் பணியில் ஈடுபட்டு வருகிறார்.