அந்த 17 நாள் பாலாவும், சூர்யாவும் இப்படித்தான் இருந்தார்கள்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை சொன்ன இளம் நடிகை

surya
surya

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் சூர்யா. இவர் எப்பொழுதுமே வித்தியாசமான கதைகள் உள்ள படங்களில் நடிக்கக் கூடியவர் அந்த வகையில் பாலாவுடன் இணைந்து நந்தா, பிதாமகன், அவன் இவன்  போன்ற படங்களில் நடித்த சூர்யா நான்காவது முறையாக வணங்கான் திரைப்படத்தில் இருவரும் கூட்டணி அமைத்தனர்

படத்தின் சூட்டிங் நன்றாக தொடங்கி எல்லாமே போய்க்கொண்டிருந்தது ஆனால் இருவரும் இடையே பிரச்சனை எழுந்தன.. இதனால் சூர்யா வணங்கான் படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் அதோடு மட்டுமல்லாமல் தனது 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் வெளியே எடுத்தார்.

இதனை அடுத்து இயக்குனர் பாலா அந்த  கதையை மாற்றாமல் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க வைத்து தற்போது படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி ஷெட்டி முதலில் சூர்யாவின் வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால் அவரும் விலகி விட்டார். வணங்கான் திரைப்படத்தில் நடித்தது குறித்து  அவர்  சொன்னது.. அதாவது 17 நாட்கள் அந்த படப்பிடிப்பு சமயத்தில் கீர்த்தி சிட்டி இருந்தாராம் அதன் பிறகு படம் நின்று விட்டதால் தனக்கு வேறு படங்கள் கமிட்டாகி இருந்ததால் இந்த கால் ஷீட்க்கு ஏற்றபடி தன்னால் வணங்கான்  படத்தில் நடிக்க முடியவில்லை என கூறினார்.

அந்த 17 நாட்கள் சூர்யாவும், பாலாவும் எப்படி இருந்தார்கள் என்று என்னால் ஞாபகப்படுத்த முடிகிறது அவர்களுள் ஒரு நல்ல ராம்போ இருந்ததாகவும் நல்ல ஒரு அன்பு இருந்ததாகவும் கூறினார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி என்றால் ஏன் வணங்கான் படம் டிராப்பானது என்பது குறித்து கேள்வி கேட்டு வருகின்றனர் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.