மீண்டும் இன்னொரு முறை இணையும் பாலா, சூர்யா.! அந்த படத்தின் இசையைப்பாளர் யார் தெரியுமா.? சூப்பர் செய்தி இதோ.

bala and surya
bala and surya

தமிழ் சினிமாவில் யாரை வேணாலும் மறக்கலாம் ஆனால் ஒரு சிலரை மட்டும்   எப்போதும் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு தனது திறமையை வெளிக்காட்டி இருப்பார்கள் அந்த வகையில் இயக்குனர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் பாலா.

இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும் அந்த வகையில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி ஆகிய படங்கள் இன்னும் மக்களுக்கு பிடித்த  படங்களாகத் தான் இருக்கிறது. பாலா படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை வேலை வாங்குவார்.

அதுவரையும்  அவர்களை வற்புத்தியவது அந்த நடிப்பு திறமையை வாங்குவார் அதுதான் அவரது கலை. பாலா இப்படி செய்தாலும் அதன் பிறகு அந்த ஹீரோவுக்கு நடிப்பு திறமை நன்றாக வருவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களில் ஈஸியாகவும் நடிப்பதால் நல்ல பெயரையும் பெறுகின்றனர்.

அதனால் பாலா படங்களில் நடிக்க பல நடிகர்களும் நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் கடைசியாக பாலா நாச்சியார் படத்தை எடுத்திருந்தார் அதன் பிறகு இவர் படங்கள் எடுக்காமல் இருந்தவர் இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறது அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு சூப்பர்ஹிட் படமாக இருக்கும் என தற்போது ரசிகர்கள் கனவு காண ஆரம்பித்து விட்டனர்.