விஜயகாந்த் – ராவுத்தர் போல நானும், அந்த இயக்குனரும் இருக்க ஆசைப்பட்டோம் நடக்கவில்லை – அமீர் பேச்சு

Ameer
Ameer

Ameer : சிறந்த படங்களை எடுக்க கூடியவர்களில் ஒருவர் அமீர். முதலில் மௌனம் பேசியதே படத்தை எடுத்து அறிமுகமானார் அந்த படத்தில் லைலா, சூர்யா, த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருப்பனர். படம் பெரிய ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த ராம் படத்தை எடுத்தார்.

இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது மூன்றாவதாக பருத்திவீரன் படத்தை எடுத்தார் இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றி என்று உங்களுக்கே தெரியும் ஆனால் இந்த  படத்தின் பொழுது தயாரிப்பாளர் ஞானவேலுக்கும் அமீருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து அது பெரியதாக வெடித்தது.

வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய அஜித்.. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய், தனுஷ், சூர்யா

இன்று வரை கூட அந்த பிரச்சனை ஓயவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது பல வருடங்கள் கழித்து ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவான் என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் சரியாக போகவில்லை அதன் பிறகு இவர் நடிக்க ஆரம்பித்து விட்டார்.  வாடிவாசல் திரைப்படத்திலும் அமீர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இப்படிப்பட்ட அமீர், இயக்குனர் பாலாவுடன் நன்றாக பழகி வந்தார்  சில காரணங்களால் பாலாவிடமிருந்து  பிறிந்தார். அதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர் சொல்லி  உள்ளார்.. பாலாவும், நானும் ஒன்றாக தான் சென்னை வந்தோம் பிறகு நான் ஊருக்கு சென்று விட்டேன் அவரும் உதவி இயக்குனராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குனர் ஆகிவிட்டார்.

நான் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உக்காந்து அழுவ செஞ்சிருவேன்.. அர்ச்சனாவை வேண்டுமென்றே வம்பு இழுக்கும் நிக்சன் -வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்தேன் பிறகு நந்தா படத்தை ஆரம்பித்தார் அதில் 70% படம் வரை வேலை பார்த்தேன் அந்த சமயத்தில் எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. அதாவது நந்தா படத்தின் பொழுது பாலா வெற்றி  பெற்ற இயக்குனராகிவிட்டார் அவரை பார்க்க பலர் வருவார்கள் அவர்கள் முன் எப்படி அழைப்பது அவரை எப்படி அணுகுவது என்று எனக்கு புரியாமல் இருந்தது.

அவருக்கு வேண்டுமானால் மரியாதை கொடுக்கலாம் அவர் கை காண்பிப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன் இங்கு இருப்பது சரி இருக்காது என்பதை உணர்ந்து வெளியேறி விட்டேன் அந்த படத்தில் நான் இணை இயக்குனராக வேலை பார்த்தேன் எனவே படம் வெளியானதும் இணை இயக்குனர் என்ற இடத்தில் எனது பெயர் இருக்கும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் அதில் இல்லை சரி உதவி இயக்குனர் என்ற இடத்தில் ஆவது இருக்கும் என்று பார்த்தேன் அதிலும் இல்லை எனக்கு அது பெரிய அவமானமாக மாறிவிட்டது. அதன் பின்னர் தான் இயக்குனராக வேண்டும் என்ற வெறி எனக்கு பிறந்தது பாலாவும், நானும் விஜயகாந்த் – ராவுத்தர் போல் இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை என்றார்.