Naan kadavul ajith : நடிகர் பாலா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இவர் சேது திரைப்படத்தின் மூலம் இதுவருடைய திரை பயணத்தை தொடங்கினார் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியவர் அந்த வகையில் விக்ரம் சூர்யா ஆர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பாலா தான் என ஒரு தகவலும் இருக்கிறது.
பாலா இயக்கத்தில் நடித்த பிறகுதான் இவர்களுக்கு சினிமா வாழ்க்கை புகழுக்கு சென்றது சேது திரைப்படத்தின் மூலம் விக்ரமையும், நந்தா திரைப்படத்தின் மூலம் சூர்யாவையும், நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் ஆர்யாவையும் வளர்த்து விட்டார் பாலா. அதேபோல் நான் கடவுள் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது ஏனென்றால் அந்த திரைப்படத்தில் முதன் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தார் அதற்காக ஷூட்டிங் கூட நடந்தது.
கத்தியால் சரமாரியாக தாக்கிய ஒரு தலை காதலன்.. குட் நைட் பட நடிகைக்கு நடந்த சம்பவம்.
அஜித் இந்த திரைப்படத்திற்காக தீவிரமாக தயாராகி வந்தார் இதற்காக நீண்ட முடிவுடன் அஜித் காணப்பட்டார் ஆனால் ஒரு காலகட்டத்தில் இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட மோதலால் இந்த திரைப்படத்தில் இருந்து திடீரென அஜித் விலகினார். அப்பொழுது நடந்த சம்பவம் தற்பொழுது வெளியாகி உள்ளது. நான் கடவுள் படத்தின் சுவாரசியமான தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது அஜித் நான் கடவுள் திரைப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட் ஆன பிறகு அஜித்திடம் பாலா தலைமுடியை அதிகமாக வளர்க்க சொன்னாராம் அதுமட்டுமில்லாமல் தன்னிடம் கேட்காமல் ஒரு முடியை கூட வெட்டக்கூடாது எனவும் கூறிவிட்டாராம் அஜித்தும் முடியை வெட்டாமல் நீண்ட நாட்களாக பாலாவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் ஷூட்டிங் குறித்த நேரத்தில் நடைபெறவில்லை இதனால் கடுப்பான அஜித் பாலாவிடம் சென்று ஷூட்டிங் ஆரம்பிக்க போறீங்களா என கேட்க முயற்சி செய்துள்ளார் கதை விவாதம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது அதனை அறிந்த அஜித் நேராக பாலாவிடம் சென்று ஷூட்டிங் எப்பொழுது ஆரம்பிப்பீர்கள் என கேட்டுள்ளார்.
அந்த சமயத்தில் பாலாவிற்கு நெருக்கமான பலர் அங்கு இருந்துள்ளார்கள் அஜித்திற்கு ஆரம்பத்தில் இருந்தே நான் கடவுள் திரைப்படத்தின் கதையை பாலா கூறவில்லை. இதனால் அஜித் பாலாவிடம் கதையை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை ஒன்லைன் ஸ்டோரி சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார் அதற்கு நக்கலாக சிரித்தபடி அகோரி கதை என்று சொன்னார்கள்.
பாலா அப்படி நடந்து கொண்டது அஜித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை அஜித்தின் முடியை பார்த்து இந்த முடியை யாரை கேட்டு வெட்டினீர்கள் என கேட்டுள்ளார் இப்படியே இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போக அஜித் கடுப்பாகி இனிமே இந்த திரைப்படம் வேலைக்காகாது என கிளம்பி விட்டாராம். அஜித் கிளம்பும்போது பாலாவுடன் இருந்த பிரபலங்கள் அஜித்தை உட்கார வைத்து வேண்டுமென்றே வாக்குவாதம் செய்து உள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் நீ என்ன அவ்ளோ பெரிய ஹீரோவா ஒழுங்கா உட்காருயா என ஒரு நபர் கூறி அஜித்தின் முதுகிலேயே அடித்துள்ளார் இதனால் அஜித் அதிர்ச்சி அடைந்துள்ளார் இதனால் தான் நான் கடவுள் திரைப்படத்திலிருந்து அஜித் விலகினார் அதன் பிறகு பாலா மூஞ்சிலேயே முழிக்க வில்லையாம் அஜித் நடந்ததை வெளியே சொன்னால் ஒரு நல்ல இயக்குனரை தமிழ் சினிமா இழந்து விடும் என்பதற்காக தான் இந்த தகவலை வெளியே சொல்லாமல் அஜித் ரகசியமாக பாதுகாத்து வந்தாராம். ஆனால் இது எப்படியோ பலருக்கும் தெரிந்து விட்டது என சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.