18 வயது நிரம்பிய நடிகையை சூர்யாவுக்கு ஜோடியாக இழுத்துப் போட்ட பாலா – உற்சாகத்தில் படக்குழு.?

bala-and-surya
bala-and-suryabala-and-surya

நடிகர் சூர்யா சூரரை போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அந்த வகையில் வெற்றிமாறனுடன் முதன்முறையாக கைகோர்த்து வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்த பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாலாவுடன் பதினைந்து வருடம் கழித்து மீண்டும் இணைந்துள்ளதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பாலா சூர்யா இதுவரை இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் படங்களாக அமைந்து உள்ளதால் சூர்யாவின் 41 வது திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என  ரசிகர்கள் கணக்கு போட்டு உள்ளனர். சூர்யா பாலா இணையும் படத்திற்கான பிரம்மாண்ட செட் போட்டு வருகிறது அதற்கான புகைப்படங்கள் கூட இணையதளத்தில் தீயாய் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிக்கும்  50வது திரைப்படம் முற்றிலுமாக ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.

இந்த படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா கீர்த்தி சுரேஷ் மற்றும் பல நடிகைகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின அதேசமயம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் 18 வயது நடிகையான கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது மட்டும் நமக்கு தெரியாமல் இருந்து வந்தது.

படக்குழு தற்போது அதற்கான பதிலை அளித்துள்ளது சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயதே நிரம்பிய கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..