பாக்கியா கண்ணில் மண்ணை தூவி விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் இந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துகொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வரும் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் ஒவ்வொரு சிறிய சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் என்றால் பாக்கியலட்சுமி சீரியல் ஒன்று இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் தன்னையே நம்பி இருக்கும் பாக்கியாவை ஏமாற்றிவிட்டு ராதிகாவை கோபி காதலித்துக் கொண்டு இருக்கிறார்.
பாக்கியாவை கட்டாயப்படுத்தி தான் கோபிக்கு திருமணம் செய்து வைத்தார்கள் திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகியும் பாக்கிய மீது கோபிக்கு கொஞ்சம்கூட காதல் இல்லை. ஆனால் கோபி ராதிகாவை காதலித்து வருகிறார் . பாக்கியாவை ஏமாற்றிவிட்டு ராதிகாவை காதலித்து வருவது கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு தெரிந்துவிட்டது.
ஆனால் பாக்கியா இதை கேள்விப்பட்டால் தாங்கிக் கொள்ள மாட்டாள் என பயந்த ராமமூர்த்தி கோபியை கண்டித்து விட்டுவிடுகிறார். அதேபோல் பாக்கியா என்னதான் கோபியை விழுந்து விழுந்து கவனித்தாலும் பாகியவை கோபிக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. ராமமூர்த்தி என்னதான் கண்டித்தாலும் கோபியின் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை.
முழுக்க முழுக்க ராதிகாவுடன் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் எப்படியாவது ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நிறுத்திய ஆகவேண்டுமென ராமமூர்த்தி நினைக்கிறார். இப்படி இருக்கையில் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகும் அளவிற்கு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வீட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியாக்கிய உள்ளது.