பாகுபலி, கேஜிஎஃப் படங்களை ஓரம் கட்ட வெளியாகும் தமிழ் திரைப்படம்.! பாதி படத்தை பார்த்துவிட்டு இயக்குனரை பாராட்டிய பிரபல நடிகர்..

kgf
kgf

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வருகிறது. எனவே ரசிகர்கள் பிரபல முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்களுக்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். மேலும் வசூல் ரீதியாக தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் பெரிய அளவிற்கு ஹிட் படமாக அமையவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் தான் தற்பொழுது வரையிலும் டாப் வசூல் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வாறு இதற்கு முக்கிய காரணம் வரலாற்று படங்கள், அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தான் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். அப்படி பிற மொழி படங்களான பாகுபலி, கேஜிஎஃப் 2 பாகங்கள் தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்று வெற்றினைக் கண்டது.

இவ்வாறு தமிழிலேயே இந்த அளவிற்கு வெற்றியை பெற்ற நிலையில் தெலுங்கிலும் இந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் வசூலை பெற்றது. இவ்வாறு இதை அனைத்தையும் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தற்பொழுது அதுவும் கனவாக போய்விட்டது.

இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழில் வெளியாகி சாதனை படைத்திருக்கும் நிலையில் இதனை ஓரம் கட்டுவதற்காக தமிழ் சினிமாவில் விரைவில் ஒரு திரைப்படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரையிலும் எடுக்கப்பட்ட இந்தியன் 2 படத்தினை கமலஹாசனுக்கு சமீபத்தில் சங்கர் போட்டு காட்டி உள்ளாராம் எனவே இந்த படத்தினை பார்த்த கமலஹாசன் பிரமித்து விட்டாராம் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் வெற்றி நிச்சயம் பெரும் என இயக்குனர் சங்கரை பாராட்டி இருக்கிறார். எனவே இதனால் பாகுபலி மற்றும் கேஜிஎப் 2 போன்ற படங்களின் வசூல் சாதனையை இந்தியன் 2 முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.