Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஏழில் அமிர்தாவிடம் மீண்டும் கணேஷ் அம்மா கால் பண்ணாங்க ரொம்ப அப்பாவுக்கு உடம்புக்கு முடியலையாம் எனக் கூற உடனே அமிர்தா அழுகிறார். அதனால் எழில் நான் அனைவரிடமும் பேசுகிறேன் என கூறிவிட்டு கீழே செல்கிறார். அமிர்தாவின் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையா அதனால் போய் பார்த்துவிட்டு வரட்டும் என கூறுகிறார்.
ஆனால் கோபி, ஈஸ்வரி என அனைவரும் அதெல்லாம் போகக்கூடாது என மறுக்கிறார்கள். அதேபோல் ராமமூர்த்தியும் தேவையில்லாத வேலை இது என பேச அவங்க அமிர்தாவை தான் பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டாங்க அதனால கடைசி நேரத்துல போய் பாக்கலனா நல்லா இருக்காது என பேச உடனே பாக்கியா நான் வேணா கூட போயிட்டு வருகிறேன் என கூறுகிறார்.
பட வாய்ப்புக்காக இறங்கி அடித்த இளம் நடிகை.. ஆத்தாடி பிகினி வீடியோவா..
அப்ப நீ முடிவு பண்ணிட்ட தானா உன் பிளான் தான நீ யாருக்கும் அடங்க மாட்டியா என ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறார். நீ எங்க வேணாலும் போ யாரை வேணாலும் அழச்சிட்டு போ ஆனா எழில் அங்க போக கூடாது ஏதாவது ஒன்னுனா என்ன பண்ண முடியும் என ஈஸ்வரி கூறி விடுகிறார். அதனால் பாக்கயா அமிர்தாவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் கணேசன் அப்பா அம்மா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு போனதும் பாக்கியா மற்றும் அமிர்தாவுக்கு அதிர்ச்சி தான் ஏனென்றால் சாகப்பிழை கிடக்கும் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் நன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கணேஷ் உள்ளே வருகிறார் உடனே அமிர்தாவை அழைத்துக் கொண்டு பாக்கியா வா போகலாம் எனக் கூற கணேஷ் பிரச்சினை பண்ணி அமிர்தா கழுத்தில் கத்தியை வைத்து நிலா பாப்பாவை குடு என கேட்கிறார் முதலில் கொடுக்க மறுத்த பாக்யா அதன் பிறகு கணேஷ், நான் என்ன வேணாலும் செய்வேன் என சொன்னதும் நிலாவை கொடுத்து விடுகிறார்.
நிலா பாப்பாவை அழைத்துக் கொண்டு கணேஷ் ஒரு வண்டியில் ஏறி செல்கிறார் அப்பொழுது கணேஷன் அப்பா அம்மா அடித்துக் கொண்டு அழுகிறார்கள். பாக்கியா ஆட்டோவில் அவர்களை பின்தொடர்ந்து போகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.