Bakkiyalakshmi serial October 4 : எபிசோடில் ஜெனியோட குழந்தையை ஈஸ்வரி, இனியா, கோபி, பாக்கியா என எல்லோரும் கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ராமமூர்த்தி ஜெனி மற்றும் குழந்தையை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகின்றார்.. பிறகு குழந்தை இடம் நான் தான் உன் கொள்ளு தாத்தா என்று சொல்கிறார்..அடுத்து ராதிகாவும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்..
ஜெனி ரூமை திறந்து உள்ளே வரும் பொழுது பாக்கியா மற்றும் கோபி இருவரும் சேர்ந்து குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கின்றனர் அதை பார்த்து ராதிகா எரிச்சல் அடைகிறார் பின்பு கோபி ராதிகாவை பார்த்ததும் வா ராதிகா நீ வருவேன்னு நினைக்கவே இல்லை என்று சொல்கிறார், குழந்தையை பார்த்துவிட்டு பிறகு ராதிகா கோபியை வெளியே தனியா கூப்பிட்டு அதான் இங்க ஜெனி மற்றும் குழந்தை கூட உங்க வீட்ல உள்ள எல்லோருமே இருக்காங்களே நீங்களும் இங்கதான் இருக்கணுமா,
என்னோட ஆபீஸ் ஃபங்ஷனுக்கு போகணும் என்று சொல்ல பங்க்ஷன் தான் இப்ப முக்கியமா என் பையனுக்கு குழந்தை பிறந்திருக்கு இந்த நேரத்துல யார் இங்க இருந்தாலும் இல்லனாலும் நான் கூட இருக்கணும் என்று சொல்ல ஆபீஸ்ல எல்லோரும் ஃபேமிலியோட வரணும் என்று நான் தான் சொல்லி இருந்தேன் இப்ப நான் நீங்க இல்லாம தனியா போறதா என வருத்தமாக பேச, உடனே கோபி இப்ப என்ன ஃபங்ஷனுக்கு நானும் வரணுமா சரி வா போகலாம் என்று ராதிகாவை கூட்டிக்கிட்டு கிளம்புகிறார்..
அடுத்து எழில் அமிர்தா சமைச்சு கொடுத்த சாப்பாடை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்து குழந்தை இடம் நான் தான் உன் சித்தப்பா, நான் தான் உன்ன பாத்துப்பேன் என்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்.. பிறகு கணேஷ் அமிர்தாவை தேடி அமிர்தா படிச்ச காலேஜுக்கு சென்று அமிர்தாவோட அட்ரஸை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒரு பெண் அமிர்தாவை எனக்கு தெரியும் என்று சொல்ல நான் அமிர்தா உடைய கணவர் தான் அமிர்தா அட்ரஸ் வேண்டும் எனக் கேட்பதும் அந்தப் பெண் அமிர்தா போரூர்ல தான் இருக்கா,
எனக்கு சரியா அட்ரஸ் தெரியல ஆனா போரூரில் இறங்கி பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்ல இருக்கிற ஒரு தெருவுல தான் அவங்க வீடு இருந்தது என்று சொல்கிறார் பிறகு கோபியும் ராதிகாவும் காரில் போய்க்கொண்டிருக்கும் போது ராதிகா என்ன பாக்கியா கூட சேர்ந்து குழந்தையை கொஞ்சி கிட்டு இருந்தீங்க என்று கோபமாக கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அந்த இடியட் கிட்ட நான் ஏன் பேசுகிறேன் என்று கோபி சொல்கிறார்..
அடுத்து செழியனுக்கு மாலினி போன் பண்ணுகிறார், நான்தான் பிஸியா இருக்கேன்னு சொன்ன இல்ல நீ ஏன் திரும்பத் திரும்ப போன் பண்ற நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் என்று செழியன் சொல்ல மாலினி யாருக்கு என்னாச்சு நான் வேணா ஹாஸ்பிடலுக்கு வரட்டுமா என கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று செழியன் சொல்லுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது