Bakkiyalakshmi : இன்றைய எபிசோடில் கோபி ராதிகா கிட்ட நாளைக்கு இனியாவ கூட்டிட்டு கேரளா ட்ரிப் போகணும் அதனால மயூவோட பங்க்ஷன் ஒன் வீக் தள்ளி வச்சுக்கலாமா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா நாளைக்கு தான் பங்க்ஷன் நடைபெறும் நீங்க இருந்தே ஆகணும், அப்படி இனியா கூட போனா திரும்பி இந்த வீட்டுக்கு வந்துராதீங்க என சொல்கிறார்.
பிறகு கோபி இனியா கிட்ட போய் நாளைக்கு உன் கூட ட்ரிப்புக்கு நான் வர முடியாது, மயூ பெரிய பொண்ணு ஆயிட்டா, அதனால அந்த ஃபங்ஷன்ல நான் இருந்தாகணும் என்று சொல்வதும் இனியா ரொம்ப அப்செட் ஆகி ட்ரிப்புக்கு நா போக முடியாதா என வருத்தப்படுகிறார் உடனே கோபி நான் வேணும்னா செழியன் கிட்ட பேசி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பின்பு செழியனிடம் கோபி நாளைக்கு இனியாவை கேரளா ட்ரிப் நீ கூட்டிட்டு போறியா என்று கேட்க என்னால எல்லாம் முடியாது என் ஆபீஸ்ல லீவு தர மாட்டாங்க என்று சொல்லிட்டு போன வச்சிடுறாரு. அடுத்து வீட்டில் இனியா அப்பா ட்ரிப்புக்கு வர முடியாது என்று சொன்னதை நினைத்து கொண்டிருக்கிறது.
அப்பொழுது கோபி இனியாவுக்கு போன் பண்ணி செழியன் கிட்ட கேட்ட அவனும் வர முடியாதுன்னு சொல்றான் என்று சொல்ல இனியா அப்செட் ஆகிறது, இன்னொரு பக்கம் எழிலுக்கும் ஒரு டாகுமெண்டரி ஃபிலிம் பண்ண வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதற்கு இரண்டு நாள் ஷூட்டிங் இருக்கிறதாம்.
அதனால் எழிலாலும் இனியாவை கூட்டிட்டு போக முடியவில்லை, பிறகு பாக்யா நா வேணுனா கூட்டிட்டு போகட்டுமா என்று கேட்க, உன்னால எல்லாம் முடியாதுமா நான் ரோடு ட்ரிப் போகணும் ரோட்ல பார்க்கிறதெல்லாம் அப்சர்வ் பண்ணி எழுதணும் உன் கூட போன பஸ், ட்ரெயின்ல தான் போற மாதிரி இருக்கும் நீ வேண்டாம் என்று சொல்கிறார்.
பிறகு பாக்யாவும் செழியனுக்கு இன்னொரு முறை போன் பண்ணி கேக்குறாங்க அப்பொழுது செழியன் மாலினி வீட்டில் தான் இருக்கிறார். பாக்யா செழியன் கிட்ட இனியாவை கேரளா ட்ரிப் கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க நான் தான் அப்பா கிட்ட சொல்லிட்டேன்ல இனியாவ என்னால கூட்டிட்டு போக முடியாது..
வேணுன்னா ட்ரிப்ப கேன்சல் பண்ண சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது நாளை இனியா யாருடன் கேரளா ட்ரிப் போகிறார் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்..