விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபி இனியா தன்னை விட்டு பாக்யா வீட்டிற்கு போனதிலிருந்து மிகவும் சோகமாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் புலம்பி கொண்டே இருக்கிறார். இந்த பிரிவை தாங்கிக் கொள்ளாமல் கோபி குடிக்க ஆரம்பித்து விடுகிறார்.
தன்னால் எழுந்திருத்து நடக்க முடியாத அளவிற்கு கோபி குடித்து விடுகிறார் பின்பு காரை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கும் பொழுது நிதானம் இல்லாமல் ஒரு தூண் மீது காரை மோதி காரை நிறுத்திவிட்டு காருக்கு பக்கத்திலேயே வந்து படுத்து கொள்கிறார் அது மட்டும் இல்லாமல் இனிய என் இனிய என புலம்பி கொண்டே இருக்கிறார்.
கீழே விழுந்து கிடக்கும் கோபியை இருவர் பார்த்து இவர் அதிகமாக குடித்துவிட்டார். வாழ்க்கையில் என்ன கஷ்டமோ தெரியவில்லை என பேசிக் கொண்டிருக்கும் பொழுது கீழே கிடக்கும் போனை பார்த்து பாக்யாவிற்கு கால் செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் உங்கள் கணவர் ஃபுல்லாக குடித்துவிட்டு இங்கே கிடக்கிறார் என கூற பாக்கியா அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தை எழிலிடம் கூறுகிறார் உடனே நாம் என்ன செய்ய முடியும் அங்கேயே கிடக்கட்டும் என கூறுகிறார்.
பின்பு பாக்யா திரும்பத் திரும்ப கேட்டவுடன் எழில் உடனே அவர் கெட்டவராக இருக்கட்டும் நாம வா போய் பாக்கலாம் என பாக்கியவை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள் அங்கு போய் பார்த்ததும் கோபி காருக்கு பக்கத்திலேயே விழுந்து கிடக்கிறார் அது மட்டும் இல்லாமல் புலம்பி கொண்டே இருக்கிறார் பின்பு எழில் பைக் இங்கேயே விடலாம் காரில் அவரைக் கொண்டு போய் அவங்க வீட்டில் விட்டுவிடலாம் என கூற வேண்டாம் பைக் இங்கே இருந்தால் சேஃப்டி கிடையாது என கூறுகிறார் பாக்யா.
அதுமட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தில் ஏழில் விசாரிக்கிறார். பைக் இங்கே இருந்தால் காணாமல் போய்விடும் என கூறுகிறார்கள் உடனே பாக்யா நீ பைக் எடுத்துக் கொண்டு பின்னாடியே வா நான் காரை ஓட்டிக்கொண்டு போகிறேன் என கோபியை காரில் ஏற்றி காரை ஓட்டிக்கொண்டு செல்கிறார் பாக்யா. அப்பொழுது கோபி புலம்பிக்கொண்டே வருகிறார் அது மட்டும் இல்லாமல் பாக்யாவை புகழ்ந்தும் ராதிகாவை மோசமாக விமர்சித்தும் வருகிறார்.
ராதிகாவால் தான் என் வாழ்க்கையை போனது என புலம்பி கொண்டு இருக்கா அதைக் கேட்டு பாக்கிய அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது அது மட்டும் இல்லாமல் பாக்கியா என்னதான் தனக்கு துரோகம் செய்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதை நிரூபித்து காட்டி விட்டார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.