தென் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கிய உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து வாரிசு படம் வெளியாவதற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டும் இருப்பதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது அதன் பிறகு வாரிசு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பில் நேற்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரைலர் வெளியானது.
வெளியான சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தாலும் அதைவிட அதிகமாகன விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வாரிசு படம் சில தெலுங்கு படத்தின் சாயலில் இருப்பதாக கூறியது மட்டும் இல்லாமல் வாரிசு படம் காப்பியடிக்கப்பட்ட திரைப்படம் என்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து நேற்று வெளியான ட்ரெய்லர் குறித்து விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியது என்னவென்றால் வாரிசு திரைப்படம் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது மேலும் வாரிசு படம் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
அத்துடன் வாரிசு படம் தெலுங்கிலும் கொடி நாட்ட வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் கூறியது தான் ஹைலைட் அதாவது வாரிசு பட ட்ரெய்லரில் ஆரம்பத்தில் ஒரு பாட்டு வரும் அந்த பாட்டு வா தலைவா வா நீயே உனக்கு தலைவா என்று அந்த முதல் பாடல் அமைந்திருக்கும்.
இதைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் எங்கள பாத்தா என்ன கேன பைய மாதிரி தெரியுதா என்னையா பாட்டு இது வா தலைவா வா நீயே உனக்கு தலைவா என்றால் அவரே அவருக்கு தலைவரா? என்று கேட்டு கடுப்பாகி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் மேலும் இது போன்ற தவறான வரிகளை நியாயப்படுத்துவது சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார் ரங்கநாதன்.