அஜித்தின் “துணிவு” பட போஸ்டரை பத்தி பேசிய பயில்வான் ரங்கநாதன்..! என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்.

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் அஜித் இவர் சினிமா ஆரம்பத்தில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹச். வினோத்துடன்  மீண்டும் ஒருமுறை கைகோர்த்து திரைப்படம் தான் ஏகே 61.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆக்சன் காட்சிக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது ஏகே 61 திரைப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு,  மகாநதி சங்கர், அஜய்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் செல்ல இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களுக்கு ஒரு விருந்து கொடுத்துள்ளது படக்குழு  அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டர் செம மாஸ்ஸாக இருந்த காரணத்தினால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் படத்தின் டைட்டிலையும் அதனுடன் சேர்த்து படத்தின் தலைப்பையும்  வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இணையதள பக்கத்தில் அஜித்தின் துணிவு பட போஸ்டர் தான் வைரலாகி வருகிறது.இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அஜித்தின் துணிவு பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள நோ கட்ஸ் நோ க்ளோரி என்ற ஆங்கில வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசி உள்ளார் பயில்வான் ரெங்கநாதன்.

மேலும் தனக்கென வைக்கப்பட்ட ரசிகர்கள் மன்றத்தை காலி செய்த ஒரே நடிகர் அஜித் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ள வர் பிற நடிகர்கள் அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை படத்தின் காட்சிகள் எதுவும் லீக்காகவில்லை என்றும் கூறி உள்ளார். இவர் இவ்வாறு பேசியது மறைமுகமாக வாரிசு படத்தின் மீது இவர் அட்டாக் செய்வதாக பலரும் கூறி வருகின்றனர்.