உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதலில் “இருவர்” என்னும் படத்தில் நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் தனது திறமையையும், அழகையும் காட்டி நடித்ததால் அங்கு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இருப்பினும் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு தமிழில் 10 வருடங்களுக்கு மேல் நடிக்கவே இல்லை இனி அவர் தமிழ் பக்கம் நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் திடீரென மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
நந்தினியாக முதல் பாகத்தில் மிரட்டி ஐஸ்வர்யா ராய் இரண்டாவது பாகத்திலும் மிரட்ட உள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளிவந்து பெரிய அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது படம் வெளிவர இன்னும் விரல்விட்டு என்னும் நாட்களில் இருப்பதால் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ இணையதள பக்கத்தில் வைரலானது இதை பார்த்த பயில்வான் ரங்கநாதன்.. பெரிய இடத்து மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?
என்றும் இவ்வளவு பெரிய வயது மகள் இருக்கும் பொழுது கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என தனது கருத்துக்களை கூறியுள்ளார் மேலும் குடித்துவிட்டு ஆட வேண்டும் என்றால் பப், கிளப் என்று பல இடங்களுக்கு செல்லலாம் பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தில் இப்படியா ஆட்டம் போடுவது என சரமாரியாக கேள்விகளை கேட்டு இருந்தார் பயில்வான்.