நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்.! பகீர் கிளப்பிய பயில்வான்

nithya menen
nithya menen

Bayilvan Ranganathan: பயில்வான் ரங்கநாதன் நடிகை நித்யா மேனனுக்கு ஏன் இதுவரையிலும் திருமணம் ஆகவில்லை என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்து வருவதனால் பயில்வான் ரங்கநாதன் மீது ஏராளமான பிரபலங்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இவர் எந்த பேட்டிக்கு சென்றாலும் பிரபலத்திடம் இடக்கு முடுக்கான கேள்விகளை கேட்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றில் திரை பிரபலங்கள் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்து வருகிறார். அப்படி தற்பொழுது நித்யா மேனனுக்கு திருமணமாகாதது குறித்து தற்பொழுது பேசியுள்ளார்.

நடிகை நித்யா மேனன் ஆகாஷ கோபுரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அப்படி கன்னடத்திலும், மலையாளத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு இதன் மூலம் பிரபலமான நித்யா மேனன் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிசியாக இருந்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து வெப்பம், பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருஞ்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நித்யா மேனனுக்கு திருமணம் நடக்காதது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, 35 வயதாகியும் நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது. கேரளாவில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் அதற்கு காரணம் வரதட்சனை கொடுமை. அந்த கொடுமை தனக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதேபோல் கதாநாயகிகள் தங்களை மெலிந்த தேகத்தில் வைத்துக்கொள்ள பல முயற்சிகளை செய்வார்கள். ஆனால் நித்யா மேனனோ இதில் விதிவிலக்கு அதனால் அவருடைய உடல் எடை அதிகமாக இருக்கிறது இதனால் கூட திருமணம் தடைப்பட வாய்ப்பு இருக்கிறது என்றார்.