SJ Surya: வித்தியாசமான கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மிரட்டி வரும் எஸ்.ஜே சூர்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் குறித்து பார்க்கலாம். ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி வரும் எஸ. ஜே சூர்யா பொதுவாக வித்தியாசமாக யோசிக்க கூடிய ஒருவர்.
இதன் காரணமாகவே இவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிந்து வருகிறது அப்படி சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா பின்னி படலெடுத்து இருந்தார். எனவே இவருடைய நடிப்பும் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு விதமான மன நோய் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதை நான் சொல்லவில்லை விஷாலே வெளிப்படையாக பேசி இருப்பதாகவும் பலமுறை ஆணித்தரமாகவும் சொல்லி உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க, வில்லனாக எஸ்.ஜே சூர்யா மார்க் ஆண்டனி படத்தில் பட்டையை கிளப்பினார்.
எனவே இது குறித்து பயில்வான் கூறியதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் சரியான கதாபாத்திரத்தை தான் எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுத்துள்ளார். நிஜத்திலும் அவர் அப்படித்தான் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா திடீரென கத்துவார். இதை சரியாக மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யா பயன்படுத்தியுள்ளார்.
மேலும் ஒருமுறை தனது உதவியாளரிடம் மது அருந்துவதற்காக கிளாஸ் எடுத்து வர சொல்லி இருக்கிறார். அப்பொழுது அந்த கிளாஸ் கழுவியாச்சா என்று கேட்டவுடன் புதுசு தான் என்று உதவியாளர் கூறியிருக்கிறார். அதனால் என்ன கழுவ கூடாதா போய் கழுவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு எஸ்.ஜே சூர்யா நம்பிக்கை இல்லாமல் தான் பார்க்கும்படி அந்த கிளாசை கழுவ சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒரு மனநோய் எஸ்.ஜே சூர்யாவிற்கு இருப்பதாக விஷால் வெளிப்படையாக கூறியுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த மன நோய்க்கு பெயர் ஓசிடி என்றும் விஷால் எஸ்ஜே சூர்யாவுக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதை மனவருத்தத்துடன் கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.