பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் படத்தில் நடித்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று விட்டார்கள் அந்த அளவு இந்த திரைப்படம் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கிய எஸ்எஸ் ராஜமவுலி பாகுபலிக்கு முன்பு பாகுபலிக்கு பிறகு என பேசும்படி பெயரையும் புகழையும் பெற்றுவிட்டார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
மேலும் பாகுபலி திரைப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ரீதேவி தான் நாம் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜமவுலி கூறியுள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட உடன் ஸ்ரீதேவி மிகவும் கடுமையாக கோவப்பட்டு உள்ளார்.
மேலும் ஸ்ரீதேவி மற்றும் ராஜமவுலி அவர்களுக்கு அதிக கோரிக்கைகள் இருந்ததாகவும் ஸ்ரீதேவி அதிகமாக சம்பளம் கேட்டதாகவும் அதனால் ஸ்ரீதேவியை பாகுபலி திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி, ராஜமவுலி இது போன்று பேசுவார் என்று நினைக்கவில்லை என்றும்.தான் எந்த ஒரு கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் கூறினார் ஸ்ரீதேவி அதுமட்டுமல்லாமல் பாகுபலி முடிந்து போன கதை அதை பற்றி இப்போது பேச எந்த ஒரு பயனும் இல்லை நான் நடிக்காமல் இருந்த பல திரைப்படங்களில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து ராஜமௌலி அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் யார் உண்மை சொல்கிறார்கள் என்பதை பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இது பற்றி நான் பொது இடங்களில் பேசினால் தவறானது அதற்காக நான் வருந்துகிறேன் எனவும் கூறினார்.