பிரம்மாண்ட பாகுபலி படத்தின் சாதனையை அடித்து நொறுக்க தகுதியான திரைப்படம் இதுதான்.! பிரபலங்கள் ஒரே போடு

bahubali

கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தெலுங்கு திரைப்படம் என்றால் அது பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் தான். இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம்பாகம் இணைந்து வசூலில் 800 கோடி வரை மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இந்த படத்தின் சாதனையை இதுவரை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதேபோல் இந்த திரைப்படத்திற்கு நிகராக  எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

பாகுபலி திரைப்படத்தை ராஜமௌலி தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவிலேயே நம்பர்-1 இயக்குனராக மாறினார்.  இந்த நிலையில் தற்பொழுது ரத்தம் ரணம் ரவுத்திரம்(RRR) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்

RRR
RRR

RRR திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் முன்னணி ஹீரோக்களுக்கு தனித்தனியாக டீசர் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களையும் உச்சகட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டுசென்றது இந்தநிலையில் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் பாகுபலி திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் என RRR படத்தில் நடித்த நடிகர்கள் மார்தட்டிக் கொண்டு கூறிவருகிறார்கள். என்ன நடக்கும் என்பது படம் வெளியானபிறகுதான் உறுதியாக தெரிய வரும்.