பாகுபலி திரைப்படத்தை இயக்கிய ராஜமவுலி ஊரடங்கால் என்ன செய்கிறார் பார்த்தீர்களா? ரசிகர்களே பிரமிக்கும் வீடியோ

Rajamouli-tamil360newz
Rajamouli-tamil360newz

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற திரைப்படத்தை இயக்கி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர், இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார், இப்பொழுது ராஜமௌலி திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள், அதேபோல் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில் 21 நாட்கள் மட்டுமே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதனால் மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரபலங்கள் ஜிம் ஒர்க்கவுட், சமைப்பது, சுத்தம் செய்வது, பழைய புகைப்படங்களை வெளியிடுவது என வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் ராஜமௌலி தீ க்ரியட்டர் மேன் என்ற பெயரில் பிரபல இயக்குனர் ஒருவரின் சவாலை ஏற்று வீட்டை பெருக்கி சுத்தம் செய்துள்ளார், இந்த வீடியோவை வெளியிட்டு ராம் சரண் உள்ளிட்ட பல பிரபலங்களும் சவால் விட்டுள்ளார்.