இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக பார்க்கப்படுபவர் எஸ்எஸ் ராஜமவுலி இவர் இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி முதல் பாகமும், இரண்டாவது பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா செட்டி, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரோகிணி, ரம்யா கிருஷ்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். இந்திய சினிமாவிலேயே விலை உயர்ந்த திரைப்படமாக இந்த திரைப்படத்தை பார்த்தார்கள் அதே போல் இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களாக முத்திரை பதித்தது.
இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. திரைப்படம் வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் பாகுபலியில் அனிமேஷன் செய்யப்பட்ட நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சி, கிராபிக்ஸ் நாவல், ஃபின் ஆப் நெட்ப்ளிக்ஸ் வெப் சீரியஸ் ஆகியவை வெற்றியின் உச்சத்தில் இருக்கின்றன.
இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் மூன்றாவது பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி அவர்களும் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் எஸ்எஸ் ராஜமௌலி பாகுபலி மாதிரியான ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அதற்காக தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறியதாவது பாகுபலி மூன்றாவது படம் குறித்து நாங்கள் இந்த முறை வித்தியாசமாக யோசித்து வருகிறோம் இதற்கு கொஞ்ச காலம் எடுக்கும் எனவும் பாகுபலி பற்றிய சில அற்புதமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறினார். இதற்கிடையில் பிரபாஸ் இடம் இது குறித்து பேசுகையில் பாகுபலி எப்பொழுதும் என் மனதில் நெருக்கமாக இருக்கும்.
அது ஏற்படுத்திய தாக்கம் சினிமாவில் ஈடு இணையற்றது ஆனால் மூன்றாவது பாகம் இருக்குமா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார் ராஜமவுலி.