வசூலில் படுதோல்வி அடைந்த “பகாசூரன்”.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

pakasuran
pakasuran

தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் செல்வராகவன். இப்படி பேரும் புகழும் சம்பாரித்த செல்வராகவன் கடந்த சில வருடங்களாக இயக்குவதை விட நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாணி காயிதம், விஜயின் பீஸ்ட் போன்றவற்றை..

தொடர்ந்து வெற்றி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு பிரபலமும் ஒரே படத்தில் இணைந்தால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. பகாசூரன் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது.

படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்டி நடராஜ், ராதாரவி என பல திரைபட்டாளங்கள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இளம் இயக்குனர் மோகன் ஜி எடுத்த படங்களிலேயே இந்த படம் தான் மோசமான விமர்சனத்தை பெற்று வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் முதல் நாளே பாகசூரன் திரைப்படம்  ஒரு கோடி தான் வசூல் அள்ளியது இரண்டாவது நாளில் மாற்றம் இருக்கும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இரண்டாவது நாளிலும் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை.. இரண்டாவது நாளில் முடிவில் இதுவரை மட்டுமே சுமார் 3 கோடி வரை தான் பகாசூரன் படம் வசூலித்திருக்கிறதாம்.

வருகின்ற நாட்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே போட்ட காசை பகாசூரன் திரைப்படம் எடுக்கும், படக்குழுவும் சொஞ்சம் நிம்மதி ஆடையும் என சொல்லப்படுகிறது. கொடுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..