தற்போது விளையாட்டுத்துறையில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சாதித்து வருகின்றனர். இதனால் அந்த பெண்கள் பல பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர். விளையாட்டு என்றால் கிரிக்கெட், ஹாக்கி என்கின்ற நிலை தற்போது மாறியுள்ளது . பி டி உஷா, மேரி கோம், சாய்னா நேவால், போகத் சகோதரிகள் என பலரை கூறலாம்.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். சாய்னா நேவால் ஆக நடிகை பிரணிதி சோப்ரா நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரித்து வருகிறார். இயக்குனர் அமோல் குப்தே அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
சாய்னா நேவால் இறகு பந்தாட்டத்தில் லண்டனில் 2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண் ஆவார். அதுமட்டுமல்லாமல் உலக தர வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண்ணும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரணிதி சோப்ரா இந்த திரைப்படத்தில் அச்சு அசல் சாய்னா போலவே மாரி நடித்து கலக்கி உள்ளார். இதோ அந்த டீசர் வீடியோ.