மிரட்டலாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசை.! வைரலாகும் வீடியோ.

மிகவும் பிரம்மாண்டமாக ஏராளமான திரை பிரபலங்களை வைத்து பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இத்திரைப்படத்தினை மணிரத்னம் இயக்கி வருகிறார்.  இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தீவிரமாக பணியாற்றி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் ஒரு காட்சிக்கு ட்ரம்ஸ் இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

பொதுவாகவே ஏஆர் ரகுமான் இசையமைப்பில் வெளிவரும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரகுமான் பின்னனி இசையில் மிரட்டி இருக்கின்றார் என்று தெரிய வருவதாக கூறி வருகிறார்கள்.

இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு,ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,சரத்குமார்,பார்த்திபன், பிரகாஷ்ராஜ்,ரகுமான்,கிஷோர்,அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால் மோகன் ராமன்,  பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்தினை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அப்படிப்பட்ட நிலை தற்போது இத்திரைப்படத்தின் பின்னணி இசை உருவாகும் மாஸ் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.