மீண்டும் துப்பறிவாளன் 2 இயக்குனர் அதிரடி மாற்றம்.? யார் தெரியுமா.

thupparivaalan
thupparivaalan

தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கக்கூடியவர் மிஸ்கின்.இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அந்த வகையில் இவர் அஞ்சாதே ,யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் போன்ற திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.துப்பறிவாளன் முதல் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட மிஸ்கின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்த நிலையில் தேவையில்லாமல் அதிக செலவு செய்வதாக பட தயாரிப்பாளரான விஷால் அவருடன் சண்டையிட்டதால் இவர்கள் கூட்டணி விலகியது.

மேலும் இவர்கள் இடையே கடும் மோதல் நிலவி வந்ததால் விஷாலே துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில்  இவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது பேச்சு வார்த்தையை சக்சஸ் ஆகி உள்ளதால் நல்ல முடிவுக்கு வந்து உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.

vishal and msyykin
vishal and msyykin

இதனால் தற்போது விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் மிஸ்கின் அவர்களே இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன இருப்பினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் விரைவில் வெளியாகும் என தெரியவருகிறது.