முன்னணி நடிகரின் படத்தில் ஹீரோயினாக களம் இறங்கும் பேபி சாரா.! அதுவும் யார் படத்தில் தெரியுமா.

sara

Baby Sarah will be the heroine in the movie of the leading actor : தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம். இவருடன்  இணைந்து  தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் பேபி சாரா.

இப்படத்தில் விக்ரமுக்கு மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.இவர் இப்படத்தினை தொடர்ந்து தமிழில் சைவம் என்ற திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல அவார்டுகளை தட்டிச் சென்றார்.

இப்படி தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளுக்கு ஏற்றவாறு தனது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பிற மொழி பக்கமும் இவர் பிரபலம் அடைந்தார் அந்த வகையில் இவர் இந்தி சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றன இவர் இந்தியில் 404 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்என்பது குறிப்பிடதக்கது.

அதை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.இப்படி சினிமா உலகில் சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து அந்த அவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று கூற வேண்டும்.  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் மனிரத்தினம் அவர்களுடன் இணைந்து  தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை நடித்தது வருகிறார்.

இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் இவர்களுடன் இணைந்து பேபி சாரா அவர்களும் நடிக்கிறார் இப்படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக சினிமா உலகில் அறிமுகம் ஆக உள்ளார். முதல் படமே இவருக்கு மிகப் பெரிய படம் என்பதால் இவர் வெகுவிரைவிலேயே பிரபலம் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று கொண்டிருக்கும் போது கொரோனா பிரச்சினை காரணமாக தற்பொழுது படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.