குட்டி நந்தினிக்கு கிடைத்த ஜாக்பாட்.! விக்ரமின் காதலியை ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குனர்..

vikram
vikram

Actor Vikram: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விக்ரம் தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என இயக்குனர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த படத்தில் விக்ரம் அரக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பொதுவாக இவருக்கு ஜோடியாக நடிப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் தற்பொழுது குழந்தையாக இருந்தபொழுதே விக்ரமுக்கு இணையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சாரார். இவர் ஏ.எல் விஜயின் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தார். மனவளர்ச்சி குன்றிய தனது அப்பாவின் மீது அதிக பாசம் கொண்ட மகளின் உன்னதப்பூர்வமான அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இதனை அடுத்து ஏ.எல் விஜய்யின் அடுத்த படமான சைவம் படத்தில் சாரா நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியான ஐஸ்வர்யா ராயின் சிறு வயது கதாபாத்திரத்தில் சாரா நடித்திருந்தார்.

அப்படி தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்த சார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரது காதலியாக நடித்தது ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. சாராவின் கேரக்டர் பெரிதாக இடம்பெறவில்லை என்றாலும் விரைவில் சாரா ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் குழந்தையாக இருக்கும் பொழுதே சொல்கின்ற விஷயத்தை மிகவும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டு அதன்படி நடித்து விடுவாராம் சாரா. எனவே வருகின்ற 2025ஆம் ஆண்டு சாராவை கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளேன் என்று சமீப பேட்டியில் ஏ.எல் விஜய் கூறி இருக்கிறார்.