சிறுத்தையை போல் சீறி பாயும் விஜய்..! லியோ ரகசியம் உடைத்த வில்லன் நடிகர்..

leo
leo

Leo Movie: தளபதி விஜய் நடிப்பில் லியோ படபிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தொழில்நுட்ப பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் பட குழுவினர்கள் முப்புரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இரண்டாவது முறையாக லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. எனவே லியோ கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு போன்ற திரைப்படங்கள் வசூலை குவித்தாலும் கலவை விமர்சனத்தை பெற்றது.

எனவே லியோ படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விஜய் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்  வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

எனவே லியே படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து வருகின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வில்லனாக பாபு ஆண்டனி நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் இவர் இந்த படத்தின் நடித்த அனுபவம் குறித்து சமீப பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் இருக்கும் என்றும் இது ஒரு புது முயற்சியான படம் என்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் விஜய், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய மூவருடனும் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் இருப்பதாகவும் கூறியவர்.

மேலும் விஜய் சேட்டில் பொதுவாக அமைதியாக இருப்பார், ஆனால் இயக்குனர் ஆக்சன் என்று சொல்லிவிட்டால் வேற லெவல் புயலாக மாறிவிடுவார் என தெரிவித்துள்ளார். லியோ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.