ரொம்ப அசிங்கமாயிடும் மேடை என்று கூட பார்க்காமல் அடித்துக்கொள்ளும் குக் வித் கோமாளி கனி மற்றும் பாபா பாஸ்கர்.! வைரலாகும் வீடியோ.

baba-baskar
baba-baskar

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர் கனி மற்றும் பாபா பாஸ்கர் இதில் கனி குக் வித் கோமாளி டைட்டில் வென்றவர். இந்த நிலையில் இருவரும் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் அப்பொழுது அங்கு மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர் கனி மற்றும் பாபா பாஸ்கர் இவர்கள் அடிக்கடி அந்த நிகழ்ச்சியிலேயே சிறு சிறு சண்டைகள் போட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால் கனிக்கு காரக்குழம்பு கனி என்ற பெயர் வைத்தவரே பாபா பாஸ்கர் தான். அந்த அளவு இருவரும் மோதிக் கொண்டார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இருவரும் வேறு ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டார்கள் அந்த நிகழ்ச்சிக்கு ஸ்டார்ட் மியூசிக் என்ற பெயர் வைத்துள்ளார்கள் அதன் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

அந்த வீடியோவில் பாபா பாஸ்கரிடம் கனி அசிங்கமாயிடும் போங்க என காரசாரமாக சொல்லுகிறார். ஆனால் பாபா பாஸ்கர் அதை விடுவதாக தெரியவில்லை என்ன அசிங்கமாயிடும் என அவரிடம் ஏறுகிறார். இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை வருகின்ற 25 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது உண்மையிலேயே இருவரும் மோதிக் கொண்டார்களா இல்லை நிகழ்ச்சிக்காக ஏதாவது செய்துள்ளார்களா என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை. ஒருவேளை இந்த நிகழ்ச்சியை பிரபல படுத்துவதற்காக இருவரும் மோதிக் கொண்டது போல் காட்டியுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு நாள் மட்டுமே என்ன நடந்துள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரியவரும்.