Baashha movie : 1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நக்மா ரகுவரன், சரண்ராஜ், ஜனகராஜ், தேவன், சசிகுமார் விஜயகுமார், ஆனந்தராஜ், கிட்டி சத்திய பிரியா செண்பக யுவராணி என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்த திரைப்படம் தான் பாஷா இந்த திரைப்படம் ரஜினி திரைப்படத்தில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் ரஜினி வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படம் தான் 15 மாதங்கள் கிட்டத்தட்ட ஓடியதாக தகவல் வெளியாகியது அதாவது 368 நாட்கள் கோவையில் வெற்றி கரமாக ஓடியது அதேபோல் சென்னையில் 184 நாட்கள் வெற்றி கரமாக ஓடியது அதேபோல் 184 நாட்கள் ஆறு இடங்களில் வெற்றிகரமாக ஓடியது. இப்படி பாட்ஷாவின் ரெக்கார்டை மிகப்பெரிய ரெக்கார்ட் ஆக பார்க்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஆட்டோ டிரைவராக முதலில் நடித்திருப்பார் ஆனால் இந்த வேஷம் தன்னுடைய குடும்பத்திற்காக தான் என்பது போல் போகப் போக தான் தெரியும். அதேபோல் ஆட்டோ டிரைவர் ஆன ரஜினியை நக்மா விழுந்து விழுந்து காதலிப்பார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிப்பவர் காலேஜில் படிப்பதற்காக சீட் கேட்க போகும் பொழுது அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார் உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம் போய் தன்னுடைய வாழ்க்கை வரலாறு கூறுவார் அதில் நடுநடுங்கி அவருக்கு காலேஜ் சீட் கொடுப்பார்.
அதன்பிறகு ஒரு சூழ்நிலையில் ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பார்கள் அப்பொழுதுதான் ரஜினி எப்படி வாழ்ந்தார் அவருடைய பின்னணி என்ன என்பது தெரியவரும் இந்த திரைப்படம் வெளியாகி அப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
ரஜினி திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படும் பாட்ஷா திரைப்படம் வசூலில் கிட்டத்தட்ட 38 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது இதில் இந்திய அளவில் 30.09 கோடியும் வெளிநாட்டில் 6.29 கோடியும் வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது அதேபோல் ஒட்டு மொத்தமாக 38 கோடி வரை வசூல் செய்ததாக அப்பொழுதைய பத்திரிக்கையில் வெளியானது. இந்த 38 கோடி இன்றைய மதிப்பீட்டில் பார்த்தால் தலையே சுற்றி விடும் எனக் கூறுகிறார்கள் பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள்.