தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினிகாந்த் படம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
1995 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பாட்ஷா இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து நக்மா, ரகுவரன், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார் ஆர் எம் வீரப்பன் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
பாட்ஷா படம் ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருந்தது. இப்படி இருக்கின்ற நிலையில் பாஷா படம் நான் எடுக்க வேண்டிய படம் என காமெடி நடிகரும், இயக்குனருமான மனோபாலா தெரிவித்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் .. பாட்ஷா திரைப்படத்தை முதலில் நான் தான் இயக்குவதாக இருந்தது.
சத்யா மூவர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தமானது ஆனால் பாலச்சந்தர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்து விட்டார். எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது நேராக ரஜினிகாந்தை பார்க்க சென்றேன் அவரிடம் நான் என்ன தப்பு செய்தேன் நீங்கள் எப்படி ஒரு டைரக்டரை மாற்றலாம் என கேட்டேன். அதற்கு ரஜினிகாந்த் நீங்கள் தான்..
இந்த படத்தை இயக்கப் போகிறீர்கள் என எனக்கு தெரியாது சுரேஷ் கிருஷ்ணா இயக்கப் போகிறார் என்று தான் என்னிடம் கூறினார்கள் ஆதலால் நானும் சரி என்று சொன்னேன். பிறகு வீட்டில் மோர் குடித்துவிட்டு கோபத்தை குறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக அவர் கூறினார். இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.